மலேரியா தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்
மலேரியா காரணமாக உலகில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு மனித உயிர் பறிபோவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
உலக மலேரியா தினத்தை முன்னிட்டு நேற்று அந்த அமைப்பு மலேரியா தொடர்பில் பல்வேறு தகவல வெளிப்படுத்தியுள்ளது.
2000 ஆம் ஆண்டு முதல் கடந்த காலத்தில் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.2 பில்லியனாக பதிவாகியுள்ளது.
மலேரியா மரணங்கள்
அதில், 2023 ஆம் ஆண்டு மட்டும் 83 நாடுகளில் இருந்து 263 மில்லியன் மலேரியா நோயாளிகள் பதிவாகியுள்ள நிலையில், அந்த ஆண்டில் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 597,000 ஆக பதிவாகியுள்ளது.
அதன்படி, உலகம் முழுவதும் பதிவாகும் மலேரியா மரணங்களில் 95% ஆபிரிக்க பிராந்தியத்தில் பதிவாவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில் மிகவும் கவலைக்குரிய விடயம், உலகளவில் பரவியுள்ள மலேரியா தொற்றுநோயால் மூன்றில் இரண்டு பங்கு ஆபிரிக்காவின் 11 நாடுகளில் பரவியுள்ளதாகும்.
