பசில் ராஜபக்சவின் மீள் அரசியல் பிரவேசம்! மகிந்த வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராவதற்கோ எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனவே இரட்டைக்குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கக்கூடாது என்ற 22வது திருத்தச்சட்டத்தினால் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை
இதேவேளை, 22வது அரசியலமைப்பு திருத்தம் காரணமாக ராஜபக்ச குடும்பத்திற்குள் கடும் மோதல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க வேண்டுமாயின் இரட்டை பிரஜாவுரிமையை கோட்டாபய ராஜபக்சவை போன்று இரத்து வேண்டும் என பசில் ராஜபக்சவுக்கு எதிராக சமல் ராஜபக்ச தெரிவித்துள்ள கருத்து குடும்பத்திற்குள் கடும் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக தற்போது அமெரிக்காவில் இருக்கும் பசில் ராஜபக்ச திடீரென இலங்கை வர முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
