வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு நான்காவது கொரோனா தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கு இதற்கு முன்னர் இவ்வாறான விசேட தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, அவ்வாறான தடுப்பூசி தேவைப்படுமாயின், வெளிநாடு செல்வோருக்கு நான்காவது தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மற்றும் தடுப்பூசித் திட்டம் குறித்த தகவல்களை வெளியுறவு அமைச்சு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
