இலங்கையில் வீடு வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்
இலங்கையில் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் வீடுகளின் விலைகள் 15.93 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வீடுகளின் விலை 2.02 சதவீதம் அதிகரித்துள்ளதென உலகளாவிய சொத்து வழிகாட்டியின் சமீபத்திய அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
வீட்டு விலைகள் தொடர்பில் உலகின் வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இலங்கையில் வீட்டு விலைகள் 1.44 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு நேர்மாறாக, 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வீட்டு விலைகள் நாடு முழுவதும் 15.93 சதவீதம் உயர்ந்தன.
கொரோனா காலத்தில் நாட்டின் வீட்டுத் தேவை நகர எல்லைகளைத் தாண்டி கிராமங்களுக்கு சென்றுவிட்டது. இதன் விளைவாக, தலைநகர் கொழும்பில் வீட்டின் விலை உயர்வு நியாயமானதாகவே உள்ளதென குறிப்பிடப்படுகின்றது. ஆனால் கிராமப்புறங்களின் வீட்டு விலை உயர்வு மிக அதிகமாக உள்ளது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam