கனடாவில் விமான பயணங்களை மேற்கொள்ளும் தமிழர்களுக்கு முக்கிய தகவல்
கனடாவில் விமான டிக்கெட்டுகளை பதிவு செய்யும் நடைமுறையில் எயார் கனடா விமான சேவை நிறுவனம் புதிய நடைமுறை அறிமுகம் செய்துள்ளது.
கடந்த 15ஆம் திகதி முதல் தொலைபேசி மூலமாக விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 30 டொலர் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இணையதளம் அல்லது செயலி போன்ற டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்தி விமான டிக்கெட்டுகளை பயணிகள் பதிவு செய்யும் நடைமுறையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு கட்டணம்
இதன்படி, தொலைபேசி வாயிலாக முன்பதிவு செய்யும் ஒவ்வொரு பயணிக்கும் கூடுதலாக 30 டொலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படும்.

சுமார் ஒரு குடும்பத்தில் நான்கு பேர் விமான டிக்கெட்டுகளை பதிவு செய்தால் ஒவ்வொருக்கும் 30 டொலர் வீதம் 120 டொலர்களை மேலதிகமாக செலுத்த வேண்டும்.
Air Canada இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கு இந்தக் கட்டணம் பொருந்தாது.
மேலும், டிக்கெட் ரத்து செய்யப்பட்டாலும் இந்த முன்பதிவு கட்டணம் திரும்ப வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.