சூரியனை விட 8 மடங்கான நட்சத்திரம் வெடித்து சிதறல்! ஆய்வில் வெளியான தகவல்
11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வெடித்து சிதறிய சூரியனை விட 8 மடங்கு பெரிய நட்சத்திரமொன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
வானியல் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஈ.எஸ்.ஓ. என்ற ஐரோப்பிய ஆய்வகத்தின் வானியலாளர்கள் இதனை கண்டறிந்துள்ளனர்.
இந்த நட்சத்திரம் தனது இறுதி வாழ்நாளில் சூரியனை விட 8 மடங்கு அதிக எடையுடன் இருந்திருக்க கூடும் என விஞ்ஞானிகளால் நம்பப்படுகின்றது.
பால்வழி மண்டலம்
பெரிய நட்சத்திரம் வெடித்த பின்னர் மீதமுள்ளவை, நமது சூரிய மண்டலத்தின் அளவை விட 600 மடங்கு பெரிய அளவில் பரந்து காணப்படுகின்றது.
பூமியில் இருந்து 800 ஒளி ஆண்டுகள் தொலைவில் பால்வழி மண்டலத்தில் அமைந்துள்ளது. பல இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்னர், ஒன்று சேர்ந்து உருவான நட்சத்திரத்தின் உட்பகுதி இதுவென்றும் தெரியவந்துள்ளது.
இவை இன்னும் பல இலட்சக்கணக்கான ஆண்டுகளை எடுத்து கொண்டு இறுதியில் பல புதிய நட்சத்திரங்களாக உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 21 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
