முழுமையாக தீர்க்கப்படாத உள்நாட்டு போருக்கான மூல காரணங்கள் :இலங்கை தொடர்பில் வெளிவரும் தகவல்
இலங்கையில் அமைதியான சூழ்நிலையும் பொருளாதார எழுச்சியும் ஏற்படுவதற்காக சில தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணமூர்த்தி என்பவரால் குறித்த தீர்மானங்கள் பிரதிநிதிகள் சபையில்(IN THE HOUSE OF REPRESENTATIVES)சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதில், இலங்கை மக்களின் அமைதியான ஜனநாயக வாழ்க்கை மற்றும் பொருளாதார அபிலாஷைகளுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் இடம்பெற்றது. அதற்கான மூல காரணங்கள் பெரும்பாலும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மே 2009 இல் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் ஜெனரலின் விஜயத்தின் முடிவில், இலங்கை அரசாங்க தலைவர்கள் பொறுப்புக்கூறல் பற்றிய உறுதிமொழிகளை வழங்கியுள்ளனர்.
மேலும் நாட்டின் தலைவர்கள் ஒரு நிலையான தன்மையை உருவாக்குவதற்கான வாய்ப்பை பெற்றனர் எனவும் ஆனால் பொறுப்புக்கூறல் பற்றிய உறுதிமொழிகளை செய்யத் தவறிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.