வாக்காளர்கள் குறித்து தேரர் ஒருவர் வெளிப்படுத்திய தகவல்
மதம், இனம் அல்லது குல அடிப்படையில் மக்கள் இனி வாக்களிக்கத் தயாராக இல்லை என்பதை அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில்¸ வாக்காளர்கள் வெளிப்படுத்தியதாக பௌத்த விவகாரங்களின் இணைப்பாளர் தலைவர் சஸ்த்ரபதி கலகம தம்மரன்சி நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துள்ள அவர், நாட்டில் நிலவும் இனவாதம், மத பிளவுகள், தொடர்ச்சியான இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராகவே மக்கள் ஜனாதிபதி தேர்தலின்போது வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மத நல்லிணக்க மேம்பாடு
தற்போது, நாட்டில் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகள் மோசமடைந்து வருகின்றன.
எனவே, மதங்களுக்கு இடையிலான ஒற்றுமை முயற்சியின் ஒரு பகுதியாக மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு சங்கம் முடிவு செய்துள்ளது என்றும் தேரர் கூறியுள்ளார்.
எந்த மதத்தையும் நம்பாத கோயில்கள், தேவாலயங்கள் அல்லது மசூதிகளுக்குச் செல்லாத ஒரு குழுவினரே, நாட்டில் தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்காக பேசுகின்றனர்.
அவர்களின் தவறான கருத்துக்கள் காரணமாகவே, உண்மையான மத பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் பௌத்த விவகாரங்களின் இணைப்பாளர் தலைவர் சஸ்த்ரபதி கலகம தம்மரன்சி நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |