இறையாண்மை பத்திர மறுசீரமைப்பு குறித்து அரசாங்கம் வெளியிட்ட தகவல்
இலங்கை (Sri Lanka), தனது சர்வதேச இறையாண்மை பத்திர மறுசீரமைப்பை வெற்றிகரமாக முடித்ததுள்ளதாக அறிவித்துள்ளது,
இதில் 98 வீதப் பத்திரதாரர்கள் பங்கேற்கின்றதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2024 நவம்பர் 25 ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சி, நாட்டின் கடனை மறுசீரமைத்து புதிய பத்திரங்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டது.
பத்திரதாரர்களுடன் பேச்சுவார்த்தை
இந்தநிலையில், நிதியமைச்சர் என்ற முறையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிக பங்கேற்பு சர்வதேச மற்றும் உள்ளூர் பங்குதாரர்களின் நம்பிக்கையை வென்றுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக இலங்கை அரசாங்கம், 2022ஆம் ஆண்டு திவாலான நிலையில், சர்வதேச நாணய நிதிய நிபந்தனையின்படி, முதலில் தமது இருதரப்பு வெளிநாட்டுக்கடன்களை மறுசீரமைத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்தது.
இதன் பின்னரே, சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்களுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது.
இது தொடர்பில் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன (Mahinda Siriwardana), வரலாற்றில் மிகவும் சிக்கலான மற்றும் சவாலான இறையாண்மை கடன் மறுசீரமைப்பு பயிற்சிகளில் ஒன்றை இலங்கை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கைக்கு கணிசமான கடன் நிவாரணம்
இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனை அமைப்புக்களாக செயற்பட்ட லாசார்ட் மற்றும் கிளிஃபோர்ட் சான்ஸ், சிட்டி, சோடாலி அன்ட் கோ ஆகியவை, இலங்கையை இந்த ஆழமான நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்காக கடந்த 32 மாதங்களாக அயராது உழைத்ததாக அவர் கூறியுள்ளார்
இந்தநிலையில் குறித்த கடன் மறுசீரமைப்பு செயல்முறை இலங்கைக்கு கணிசமான கடன் நிவாரணத்தை வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2024 நவம்பர் 25ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சி, 2024 டிசம்பர் 12ஆம் திகதி காலாவதி காலக்கெடுவிற்கு முன்னதாகவே பத்திரதாரர்களின் குறிப்பிடத்தக்க பங்கேற்பைக் கண்டுள்ளது.
இதன்படி, இலங்கை அதன் சர்வதேச பத்திரங்களை மறுசீரமைக்க தனியார் கடன் வழங்குநர்களிடமிருந்து விரிவான ஆதரவைப் பெற்றுள்ளது என்றும் சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை இறையாண்மை பத்திர மறுசீரமைப்பின்படி, நாட்டின் 12.6 பில்லியன் டொலர் பத்திரங்களில் 96வீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலீட்டாளர்கள் தங்கள் பத்திரங்களை புதிய வடிவத்துக்கு மாற்ற ஒப்புக்கொண்டதாக அரசாங்கம் கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |