இரண்டாம் டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்டதன் பின்னர் நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு முக்கிய தகவல்
கோவிட் தடுப்பூசியின் இரண்டாம் மாத்திரை பெற்றுக்கொண்டதன் பின்னர் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால் அவ்வாறானவர்கள் ஆறு மாதங்கள் வரையில் காத்திருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள சென்ற சிலர் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்டதன் பின்னர் நோய் தொற்று ஏற்பட்டிருந்தால் அவ்வாறானவர்கள் மட்டும் ஆறு மாதங்கள் காத்திருந்து மூன்றாம் டோஸை போட்டுக் கொள்ள முடியும் என சுகாதாரப்பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
எவ்வாறெனினும், 20 வயதுக்கும் மேற்பட்டவர்கள் இரண்டாம் டோஸ் ஏற்றிக்கொண்டு மூன்று மாதங்களின் பின்னர் எந்தவொரு தடுப்பூசி நிலையத்திலும் மூன்றாம் டோஸை ஏற்றிக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து தடுப்பூசி நிலையங்களிலும் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





தேசிய விருது வாங்கிய ஜி.வி. பிரகாஷிற்கு, ஏ.ஆர். ரகுமான் கொடுத்த விலையுயர்ந்த பரிசு... போட்டோ இதோ Cineulagam

விமானத்தில் கலாட்டா செய்த பிரித்தானியரை காதைப் பிடித்து இழுத்துச் சென்ற பிரான்ஸ் பொலிசார்: ஒரு வைரல் வீடியோ News Lankasri
