தகவல்களை வெளியிட முடியாது! மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்
கடந்த செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய வரிச் சலுகையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நிதியங்களின் எண்ணிக்கை மற்றும் சம்பாதித்த வருமானம் பற்றிய தகவல்களை வெளியிட முடியாது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal) தெரிவித்துள்ளார்.
வரிச் செலுத்தா, சொத்து விபரங்கள் மற்றும் ஒரு சத வீத வரிசை செலுத்த விரும்பும் நபர்களுக்கு பொது சலுகையை வழங்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், வரிச் சலுகை வழங்கப்பட்டது.
2000 ஆம் ஆண்டு இதே போன்ற சட்டமூலத்தை கொண்டு வருவது பற்றி அன்றைய அரசாங்கம் ஆராய்ந்தது. எனினும் எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டதை அடுத்து அது கைவிடப்பட்டது.
இந்த சட்டமூலம் மோசடி மற்றும் அநீதியானது. சட்டமூலம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்ததுடன் கறுப்பு பணத்தை வைத்துள்ள நபர்கள், அந்த சட்டவிரோத பணத்தை சட்ட ரீதியான பணமாக மாற்ற இது சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் என சுட்டிக்காட்டியிருந்தனர்.



