ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்பில் வெளியான தகவல்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனமும் இலங்கை அரசாங்கமும், 2024 ஜூன் மாதம் செலுத்தப்பட வேண்டிய 175 மில்லியன் அமெரிக்க டொலர் பிணைமுறிக்கான மறுசீரமைப்பு குறித்து பிணைமுறிதாரர்களின் குழுவுடன் கொள்கை ரீதியான உடன்பாடு எட்டியுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், மொத்தக் கடனில் 15% தள்ளுபடி செய்யப்படும். எஞ்சிய தொகை 4% வட்டி வீதத்துடன் கூடிய ரொக்கம் மற்றும் நடுத்தர கால அரசாங்கப் பிணைமுறிகளின் கலவையாகப் பரிமாறப்படும்.
இதன் மூலம் அரசாங்கத்தின் உத்தரவாதக் கடப்பாட்டில் இருந்து நிவாரணம் கிடைக்கும். எவ்வாறாயினும், இந்த உடன்பாடு அமைச்சரவை, சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உத்தியோகபூர்வ கடனாளர் குழுவின் இறுதி அங்கீகாரங்களுக்கு உட்பட்டதாகும்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் வெளிநாட்டுக்கடன்
இந்த ஆண்டின் இறுதிக்குள் மறுசீரமைப்பை செயல்படுத்தி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் வெளிநாட்டுக் கடனாளிகளுடனான உறவுகளை முழுமையாக இயல்புநிலைக்குக் கொண்டுவர இரு தரப்பினரும் எதிர்ப்பார்க்கின்றனர்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், மொத்தக் கடனில் 15% தள்ளுபடி செய்யப்படும்; எஞ்சிய தொகை 4% வட்டி வீதத்துடன் கூடிய ரொக்கம் மற்றும் நடுத்தர கால அரசாங்கப் பிணைமுறிகளின் கலவையாகப் பரிமாறப்படும்.

இதன் மூலம் அரசாங்கத்தின் உத்தரவாதக் கடப்பாட்டில் இருந்து நிவாரணம் கிடைக்கும். எவ்வாறாயினும், இந்த உடன்பாடு அமைச்சரவை, சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உத்தியோகபூர்வ கடனாளர் குழுவின் இறுதி அங்கீகாரங்களுக்கு உட்பட்டதாகும்.
இந்த ஆண்டின் இறுதிக்குள் மறுசீரமைப்பைச் செயல்படுத்தி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் வெளிநாட்டுக் கடனாளிகளுடனான உறவுகளை முழுமையாக இயல்புநிலைக்குக் கொண்டுவர இரு தரப்பினரும் எதிர்ப்பார்க்கின்றனர்.
| நாட்டு நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |