கட்சி தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு! ஜனாதிபதித் தெரிவிற்கான திகதி வெளியானது
ஜனாதிபதி பதவிக்கான வேட்பு மனுக்கள் ஜூலை 19 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும், பின்னர் ஜூலை 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, எதிர்வரும் 13ஆம் திகதி பதவி விலகவுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தீர்மானம்

இன்று(11) மாலை கூடிய கட்சி தலைவர்கள், எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு தீர்மானித்துள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தினேஸ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, குமார வெல்கம, டிலான் பெரேரா திரான் அலஸ், டலஸ் அழகப்பெரும, மனோ கணேசன், லக்ஷமன் கிரியெல்ல, ரிஷாத் பதியுதீன், உதய கம்மன்பில உள்ளிட்ட கட்சித் தலைவர்களால் இன்று மாலை நடத்திய கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் கருத்து

இதேவேளை எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு கட்சித் தலைவர்களின் ஒப்புதலை பெறுவதற்கு ரணில் விக்ரமசிங்க மற்றுமொரு முயற்சியை மேற்கொண்ட போதும், கட்சி தலைவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளாா்.
அத்தகைய பிரேரணையை முன்வைப்பதற்கான முடிவை கட்சித் தலைவர்கள் எதிர்த்ததாகக் கூறிய அவர், இது அமைச்சரவையால் எடுக்கப்பட வேண்டிய முடிவு என்று கட்சித் தலைவர்கள் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளாா்.
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம் News Lankasri