இலங்கையர்களுக்கு ஆயிரக்கணக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புகள்! அரசாங்கம் தகவல்
எதிர்காலத்தில் தென் கொரியா, ஜப்பான் மற்றும் இஸ்ரேல் போன்ற பல நாடுகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த நாடுகளில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.
நேற்று (15) நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புகள்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், எதிர்காலத்தில் தென் கொரியாவில், இலங்கையர்களுக்கு 7,600 வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாக அஜித் கிஹான் கூறியுள்ளார்.

இதேவேளை ஜப்பானில் சுமார் 9,300 வேலை வாய்ப்புகளையும், இஸ்ரேலில் சுமார் 15,900 வேலை வாய்ப்புகளையும் பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கட்டுமானம், மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் சேவைத் துறைகளில் இந்த வேலைவாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam