சுவிட்சர்லாந்தில் அதிக சம்பளம் பெறுவோர் தொடர்பில் வெளியான தகவல்
சுவிட்சர்லாந்தில், சுவிஸ் குடிமக்களைவிட சில வெளிநாட்டவர்கள் அதிக சம்பளம் பெறுவதாக அந்நாட்டு பெடரல் புள்ளியியல் அலுவலகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், சுவிட்சர்லாந்தில் உயர்நிலை மட்டத்தில் பணியாற்றும் வெளிநாட்டவர்களுக்கு, சுவிஸ் குடிமக்களை விட அதிக சம்பளம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பணியாளர் பற்றாக்குறை
இந்நிலையில் வேலை செய்யும் சுவிஸ் நாட்டவர்களுக்கு சராசரியாக 129,100 சுவிஸ் ஃப்ராங்குகள் சம்பளம் வழங்கப்படும் நிலையில், அதே பணி செய்யும் வெளிநாட்டவர்களுக்கு சராசரியாக 130,000 சுவிஸ் ஃப்ராங்குகள் சம்பளம் வழங்கப்படுவதாக பெடரல் புள்ளியியல் அலுவலகம் மேற்கொண்ட ஆய்வு தெரிவித்துள்ளது.

அது மட்டுமின்றி, பகுதி நேரப் பணி செய்வோருக்கு அதிக சம்பளம் வழங்கப்படுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளமையானது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
மேலும், சில துறைகளில் பணியாளர் பற்றாக்குறை நிலவுவதே, சுவிஸ் குடிமக்களைவிட வெளிநாட்டவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்பட காரணம் என பெடரல் புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது.

குறித்த பணிகளைப் பொருத்தவரை, அவற்றைச் செய்பவர்கள் எந்த நாட்டவர்கள் என்பதைவிட, அந்தப் பணிக்கு பணியாளர்கள் கிடைக்காததே, அந்தப் பணிகளில் கூடுதல் சம்பளம் வழங்கப்படுவதற்குக் காரணம் என மனிதவளத்துறை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam