அரச பாடசாலைகள் தொடர்பில் வெளியான தகவல்
கடந்த ஏழு ஆண்டுகளில் நாட்டில் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை (314,109) ஆக குறைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டில், அரச கல்வி நிலையங்களில் (4,161,653) மாணவர்கள் கல்வி பயின்ற நிலையில், 2025 ஆம் ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் எட்டு சதவீதம் குறைந்து (3,747,544) ஆக பதிவாகியுள்ளது.
முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்கள்
மேலும், 2019 ஆம் ஆண்டில் 333074 மாணவர்கள் முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
2025-ஆம் ஆண்டில் முதலாம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை (266281) ஆக குறைந்துள்ளதாகவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, கடந்த ஏழு ஆண்டுகளில் முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை (66,739) குறைந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
பாடசாலைகளின் எண்ணிக்கை
இதன் அடிப்படையில், கடந்த ஏழு ஆண்டுகளில் முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளது.
2019 இல் 10,165 அரச பாடசாலைகள் இருந்துள்ளதுடன்,2025-க்குள் பாடசாலைகளின் எண்ணிக்கை 10,047 ஆக குறைந்துள்ளதுடன், இந்த காலகட்டத்தில் 118 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
நாட்டின் மக்கள்தொகை மாற்றங்கள், மக்களின் வெளிக்குடியேற்றம் மற்றும் பிறப்பு விகிதத்தில் படிப்படியான சரிவு ஆகியவையே இதற்குக் காரணம் என்று பேராசிரியர் மேலும் கூறியுள்ளார்.