எரிபொருள் நெருக்கடி தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள தகவல்
நாட்டில் எரிபொருள் கையிருப்பு போதியளவு உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
மக்கள் தேவைக்கு அதிகமாக எரிபொருளை வாங்கிக் குவிப்பதால், எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருளை விநியோகிப்பதால் தாமதம் ஏற்படுவதாக அவர் கூறுகிறார்.
ஐஓசி எரிபொருள் விலை உயர்வால், சிபெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு மக்கள் அதிகளவில் குவிந்து வருவதாக அவர் கூறுகிறார்.
எனினும் நாளாந்தம் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அவ்வாறு காத்திருந்தவர்களில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri

ஸ்ருதியிடம் கேள்வி கேட்கப்போய் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
