முட்டை விலை தொடர்பில் வெளியான தகவல் - செய்திகளின் தொகுப்பு
அடுத்த வாரத்தின் பின்னர் முட்டையின் விலை குறைவடையும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பெரிய அளவில் முட்டை சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்கள் முட்டைகளை கையிருப்பில் வைத்திருப்பதால், தற்போது சந்தையில் முட்டை தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் முட்டை உற்பத்தியாளர்களிடம் இருந்து முட்டைகளை வாங்கி சேமித்து வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்த முட்டைகளை கிட்டத்தட்ட ஒரு வருடம் குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம் என்றும், ஒரு முட்டையை 72 மணி நேரம் வெளியில் வைக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
