பசிலின் வெளிநாட்டு பயணம் தொடர்பில் வெளியான தகவல் - செய்திகளின் தொகுப்பு (Video)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய, இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர், பசில் ராஜபக்ச அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் அது தாமதமாகலாம் எனவும் கூறப்படுகிறது.
கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாகவே இது மிகவும் தாமதமானதாக கூறப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர்கள் பதவிகள் தொடர்பாக பின் வரிசை உறுப்பினர்கள் கட்சித் தலைமைக்கு பலத்த அழுத்தம் பிரயோகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan