சிறுவர்கள் மத்தியில் அழற்சி நோய்க்குறி! பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சிறுவர்கள் மத்தியில் கோவிட் 19 உடன் தொடர்புடைய நோய்க்குறி குறித்து விழிப்புடன் இருக்குமாறு மருத்துவ அதிகாரிகள் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த அறிகுறியானது, சிறுவர்கள் மத்தியில் அழற்சி நோய்க்குறி என அழைக்கப்படுகிறது.
இது கோவிட் வைரஸ் தொற்றை 2-6 வாரங்களுக்குப் பின்னர் சிறுவர்களில் வெளிப்படுத்துகிறது.குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் மருத்துவ ஆலோசகர் வைத்தியர் நளின் கிதுல்வட்ட இந்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
சிறுவர்கள் மத்தியில் நோய்க்குறி தெரியாமல் தொற்று வெளிப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நோய்க்குறிகளுடன் ஆறு தொற்றுகள் 8-15 வயது சிறுவர்கள் மத்தியில் அடையாளம் காணப்பட்டுள்ளன.அவர்கள் தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
இந்த நோய்க்குறியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு முதலில் காய்ச்சல், கடுமையான உடல் வலி, வாந்தி, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம், பின்னர் கண்கள் அல்லது தோல் வெடிப்புகளில் சிவத்தல் குறிகள் ஏற்படலாம்.
இது குறைந்த இரத்த அழுத்தத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்றும் இறுதியில் இதய செயலிழப்புக்கும் வழிவகுக்கும் என்றும் வைத்தியர் கித்துள்வட்ட எச்சரித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிரித்தானியாவில் இந்த நோய்க்குறி முதன்முதலில் கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் தாம் கூறிய அறிகுறிகள் சிறுவர்களில்
தென்பட்டால் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்கவும், மருத்துவ சிகிச்சையைப்
பெறவும் வேண்டும் என குழந்தை வைத்தியர் நளின் கித்துள்வட்ட கோரியுள்ளார்.