மட்டக்களப்பில் இன்று அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மகிழடித்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் எட்டு பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
வீதிகளில் ஊரடங்கு சட்ட விதிகளை மீறி பயணித்தவர்கள், முகக்கவசம் அணியாமல் பயணித்தவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள் என 80பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் இந்த எட்டுப்பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இதன்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறிய வகையில் முகக்கவசம் அணியாமல் சென்ற ஒருவரும் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தொடர்ச்சியான அன்டிஜன், பீசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதேநேரம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மக்கள் கடுமையான முறையில் பின்பற்றி தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு கிராமங்கள் தோறும் பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஒலிபெருக்கிககள் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
