கோவிட் தொற்றுக்குள்ளான சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு
கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் டெங்கு நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போது வைத்தியசாலையில் 55 சிறுவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளதாகவும், அவர்களில் டெங்கு நோயினாலும் பாதிக்கப்பட்ட 20 சிறுவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சிறுவர்களில் யாருக்காவது மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், அவர்களுக்கு முழுமையான இரத்த பரிசோதனை செய்யப்படும்.
மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், அது டெங்கு மற்றும் கோவிட் தொற்றாக இருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.
டெங்கு தொற்று தீவிரமாகினால் சிறுவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படலாம். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அது பாரதூரமானதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
