பெரியகல்லாறில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த நால்வருக்கு தொற்று உறுதி!
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த மேலும் நான்கு பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகச் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில் பெரியகல்லாறில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 22ஆம் திகதி செட்டிபாளையத்தில் இடம்பெற்ற விபத்தினை தொடர்ந்து அதில் பயணம் செய்த இருவர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில் அவர்களின் குடும்பத்தினை சேர்ந்த ஐந்து பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.
குறித்த தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு நேற்று மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் சோதனையில் இருவர் அடையாளப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களைத் தொடர்ச்சியாக என்டிஜன் சோதனைக்குட்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் இன்று பெரியகல்லாறு பகுதியில் 27 பேர் என்டிஜன் சோதனைக்குப்படுத்தப்பட்ட நிலையில் நான்கு பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
குறித்த நான்கு பேரும் ஒரே குடும்பத்தினை சேர்ந்தவர்கள் எனவும், முன்னர் அடையாளம் காணப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்கள் எனவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் பெரியகல்லாறு கலைமகள் வீதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அப்பகுதிக்குள் நுழைவதும் வெளியேறுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் பெரியகல்லாறு பகுதியில் பொதுமக்கள் தேவையற்ற வகையிலான நடமாட்டங்களைக் குறைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியகல்லாறில் உள்ள பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் மக்கள் நடமாட்டமும் குறைந்துள்ளது.




கனடாவில் குறைந்துவரும் புலம்பெயர்தல்... நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும்: கனடா வங்கி News Lankasri
அடிபட்டு வலியில் துடித்த மயிலுக்கு குழந்தை பிறந்தது... இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam