தடுப்பூசி மூலம் தொற்று நோயை கட்டுப்படுத்தலாம் என்பது மாயை!
இலங்கையில் தினமும் நடக்கும் கோவிட் தொற்றுடன் சம்பந்தப்பட்ட மரணங்கள் 200 முதல் 300 வரை அதிகரிப்பதை தடுக்க இன்னும் காலதாமதம் ஏற்படவில்லை என ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானப் பிரிவின் பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.
சர்வதேச செய்தி சேவை ஒன்றுடன் நடந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டுள்ள அவர், அடுத்த இரண்டு வாரங்களின் பின்னர், இலங்கையில் தினமும் ஏற்படும் கோவிட் மரணங்கள் 150 ஆக அதிகரிக்கக் கூடும் என கூறியுள்ளார்.
மரணங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமாயின் சகல நோயாளிகளையும் வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் என்பதுடன் வீடுகளில் இருந்து சிகிச்சையை வழங்கும் முறையை உருவாக்க வேண்டும்.
நோயாளிகளை அழைத்துச் செல்லவும் அவசர சேவையை வழங்கவும் உரிய கட்டமைப்பு ஒன்றை துரிதமாக ஆரம்பிக்க வேண்டும்.
ஒரு சந்தர்ப்பத்தில் பொருளாதாரமா அல்லது உயிரா என்பதை தீர்மானிக்க நேரிடும்.
தடுப்பூசி மூலம் மரணங்களை ஓரளவுக்கு குறைக்க முடிந்தாலும் அதன் மூலம் தொற்று நோயை கட்டுப்படுத்தலாம் என்பது முழுமையான மாயை எனவும் பேராசிரியர் சுனேத் அகம்பொடி சுட்டிக்காட்டியுள்ளார்.