அனுபவமற்ற கலாநிதிகள் கொல்லர்களை விட மோசமானவர்கள்: மேர்வின் சில்வா விமர்சனம்
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தில் இருப்பதாக கூறப்படும் கலாநிதிகள், பேராசிரியர்கள் என்போர் கொல்லர்களின் நிலையை விட மோசமானவர்கள் என்று மேர்வின் சில்வா (Mervyn Silva) விமர்சித்துள்ளார்.
நேற்றைய (14) தினம் கண்டி, தலதா மாளிகையில் வழிபாடுகளை மேற்கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அனுபவமற்ற கலாநிதிகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், எவ்வளவுதான் உயர் கல்வியைப் பெற்றிருந்தாலும் அது நடைமுறை அனுபவம் கொண்டதாக இருக்க வேண்டும்.
நடைமுறை அனுபவமற்ற கல்வியானது எந்தப் பயனும் அற்றது. அவ்வாறானவர்கள் கலாநிதிகளாக, பேராசிரியர்களாக இருந்தாலும் சாதாரண கொல்லர்களை விடவும் மோசமான நிலையில் தான் இருப்பார்கள்.
இந்த அரசாங்கத்தில் இருக்கும் கலாநிதி, பேராசிரியர்களின் நிலையும் அதுதான் என்றும் மர்வின் சில்வா தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 6 நாட்கள் முன்

43 வயதிலும் அழகில் மயக்கும் நடிகை மீரா ஜாஸ்மின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. பிறந்தநாள் ஸ்பெஷல் Cineulagam

எப்போதும் முத்து தான், ஆனால் இப்போது அண்ணாமலையால் ரோஹினிக்கு வந்த பிரச்சனை.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
