இந்தோனேஷியா கால்பந்து போட்டியில் ஏற்பட்ட கலவரம்:பலி எண்ணிக்கையில் தொடரும் குழப்பம்
இந்தோனேஷியாவில் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட கலவரத்தின்போது பொலிஸாரின் தவறான முடிவுகளால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கலவரத்தின்போது மைதானத்திற்கு வெளியே கடை உள்ளிட்டவைகளிலும் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதாகவும், பொலிஸாரின் மனிதாபிமானமற்ற செயலால் நண்பர்கள் பலர் உயிரிழந்ததாகவும் படுகாயமடைந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கலவரத்தில் பலி எண்ணிக்கையில் குழப்பம்
கிழக்கு ஜாவாவில் உள்ள மலாங் மைதானத்தில் இன்று ஏற்பட்ட கலவரத்தில் 170 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில்,உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 174ல் இருந்து 125 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவின் மலாங் நகரில் அரேமா எஃப்சி மற்றும் சுரபயா அணிகளுக்கு எதிராக நடைபெற்ற கால்பந்து போட்டியில் உள்ளூர் அணியான அரேமா எஃப்சி 3-2 என்ற என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
கடந்த 23 ஆண்டுகளாக தனது சொந்த கஞ்சுருஹான்(Kanjuruhan) மைதானத்தில் அரேமா அணி தோல்வியே சந்திக்காத நிலையில், தற்போதைய போட்டியில் அரேமா கால்பந்து அணியின் இந்த தோல்வியை தாங்கிக் கொள்ளாத ரசிகர்கள் மிகுந்த ஆத்திரமடைந்து வீரர்கள் மற்றும் கால்பந்து அதிகாரிகள் மீது பொருட்களை தூக்கி வீசி கலவரத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 48,000 ரசிகர்களை உள்ளடக்கியிருந்த மைதானத்தில் சுமார் 3000 பார்வையாளர்கள் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்ததை தொடர்ந்து, அவர்களை கட்டுப்படுத்த பொலிஸார் முயற்சி செய்தனர்.
இந்த முயற்சியின் போது இரண்டு அதிகாரிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீச தொடங்கினர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்ட நெரிசலில் 125 பேர், மிதியடியில் சிக்கி மற்றும் நெருக்கடியில் மூச்சு திணறி உயிரிழந்துள்ள இருப்பதாகவும் 180 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
