மேதகு திரைப்பட பிரதிகளை விற்பனை செய்த நபர்கள் கைது
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படத்தை பதிவிறக்கம் செய்து, விற்பனை செய்ததாக கூறப்படும் இரண்டு பேரை நுவரெலியா பிராந்திய குற்றவியல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வந்த நபர் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதான சந்தேக நபருக்கு சொந்தமான நுவரெலியா கார்கில்ஸ் கட்டிடத்தில் உள்ள வர்த்தக நிலையத்திலும் 50 ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு இவ்வாறு இந்த திரைப்பட பிரதி ஒன்றை பென் ட்ரைவ் போன்றவற்றில் பதிவிறக்கம் செய்து கொடுப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேக நபர்களும் நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.
பொது மக்களின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காணொளியை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் இவர்களுக்கு எதிராக நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரித்து தயாரிக்கப்பட்ட மேதகு திரைப்படத்தின் பிரதிகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri