இலங்கையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின் மிகப்பெரிய மோசடி! விசாரணைகளில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்
இலங்கையில் புகழ்பெற்ற தனியார் நிறுவனம் ஒன்று, 700 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.
பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி இந்த பாரிய மோசடி நடவடிக்கையில் குறித்த நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட பணம் மற்றும் கார்
இந்த பாரிய அளவிலான நிதி மோசடியின் ஊடாக, நாட்டின் 21 முன்னணி நிறுவனங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், அவற்றில் 6 நிறுவனங்களின் தொடர்பு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு கோட்டைப் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தின் இயக்குநராக நடித்து இந்த மோசடியை வழிநடத்தியதாக தெரிவித்து பெஸ்ஸி முகமது என்ற சந்தேக நபர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரைக் கைது செய்தபோது, அவரிடம் இருந்து பெருந்தொகையான வெளிநாட்டு பணம் மற்றும், 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொகுசு கார், தங்கப் பொருட்கள் ஆகியவற்றை குற்றப் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள 36 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தடவைகளில் வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
எனினும், அந்த பணத்தை கொண்டு நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட எந்தபொருட்களும் சுங்கப்பதிவேடுகளில் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 19 மணி நேரம் முன்
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan