மக்களின் நிலங்களை தடைகளின்றி வழங்க ஆதிவாசிகளின் தலைவர் கோரிக்கை
இலங்கையின் ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோவுக்கும் பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கும் இடையே ஒரு சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஆதிவாசி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தங்களது பாரம்பரிய நிலங்களைப் பயன்படுத்துவதில் அவர்கள் சந்திக்கும் சிரமங்கள் குறித்தும் ஆதிவாசிகளின் தலைவர் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளதாகவும் பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள்! விடுக்கபட்டுள்ள எச்சரிக்கை
நிவாரணம் வழங்கப்படவில்லை..
தங்களது பாரம்பரிய நிலங்களை எவ்விதத் தடையுமின்றி அனுபவிக்கும் உரிமை ஆதிவாசி மக்களுக்கு உண்டு என்றும், இது தொடர்பான அவசியமான சட்ட நடவடிக்கைகளை விரைவாக நிறைவு செய்ய மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் விளக்கியுள்ளார்.

சமீபத்திய டித்வா புயலால் பாதிக்கப்பட்ட ஹென்னானிகல பகுதி மக்களுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படாத நிலை குறித்த விடயங்களை ஆதிவாசிகள் தலைவர் எடுத்துரைத்துள்ளார்.
அதே நேரத்தில், பிரதமர் இதுகுறித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, அந்த குடும்பங்களுக்கு முறைப்படியான நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.