கெஹலியவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் இருவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நிதியைப் பயன்படுத்தி குழாய்களை கொள்வனவு செய்து அரசாங்கத்திற்கு சட்டவிரோதமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தியே இந்த குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
990000 ரூபா இழப்பு
அமைச்சர் ரம்புக்வெல்ல, ரூபவாஹினி கூட்டுத்தாபன பணிப்பாளர் சந்திரபால லியனகே மற்றும் முன்னாள் தலைவர் விமல் ரூபசிங்க ஆகியோருக்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரும் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 2
ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் 600 குழாய்களை கொள்வனவு செய்ததன் மூலம்
990000 ரூபா இழப்பை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம்
சுமத்தியுள்ளது.