கைவிலங்குகளுடன் நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்! அமெரிக்காவின் அடுத்த நகர்வு!
ஆவணமின்றி அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களை கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவர்களின் சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்பட்டமையானது பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுக்கு அமைய அமெரிக்காவானது தற்போது அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றி வருகிறது.
குறிப்பாக இதில் இராணுவ விமானங்களை பயன்படுத்தி கவுதமாலா, ஈகுவடார், பெரு, ஹோண்டுராஸ் நாடுகளுக்கு அவர்களை அமெரிக்கா அனுப்பி வருகிறது.
104 இந்தியர்கள்
இதனையடுத்து அமெரிக்காவில் இருந்து முதற்கட்டமாக 104 இந்தியர்கள், அந்நாட்டின் சி-17 இராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
அந்த விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மதியம் தரையிறங்கியது.
குறைவான கழிவறைகள் கொண்ட விமானத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திற்கு வருவதற்கு சுமார் 20 மணி நேரம் பிடித்ததாக என கூறப்படுகிறது.
இந்தியர்களை விலங்கிட்டு அழைத்துவரப்பட்டமைக்கு அந்நாட்டின் காங்கிரஸ் உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
எனினும் இந்த நடவடிக்கை தொடர்பான புகைப்படத்தில் காணப்படும் நபர்கள் குவாத்தமாலாவுக்கு நாடு கடத்தப்பட்டவர்கள் எனவும், இந்தியர்கள் அல்ல என்றும் அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
[IAMBHGB ]
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |