ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி! அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட C-17 விமானம்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களுடன் C-17 விமானம் அந்நாட்டுக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் பாதுகாப்பு பிரிவில் உள்ள பெயர் குறிப்பிடமுடியாத அதிகாரியொருவரை மேற்கொள்காட்டியே இந்த செய்தி வெளியாகியுள்ளது.
சட்டவிரோதமாக குடியேறியுள்ள புலம்பெயர்ந்தோரை ட்ரம்ப் நிர்வாகம் நாடு கடத்தும் திட்டத்தை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.
சட்டவிரோத குடியேறிகள்
அமெரிக்காவில் எவ்வித ஆவணங்களும் இன்றி சுமார் 11 மில்லியனுக்கும் அதிகமானோர் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் உள்ள குடியேறிகளை நாடு கடத்தும் இந்த திட்டத்தின் தொலைதூர இலக்கு இந்தியா என அந்நாட்டு பாதுகாப்பு தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
டெக்சாஸ், எல் பாசோ மற்றும் கலிபோர்னியாவின் சான் டியாகோவிலிருந்து 5,000 க்கும் மேற்பட்ட குடியேறிகளை நாடு கடத்துவதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
இராணுவ விமானங்கள்
இதுவரை இலத்தீன் அமெரிக்காவிற்கு ஆறு விமானங்கள் சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்தியுள்ளன.
இதில் நான்கு விமானங்கள் குவாத்தமாலாவுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், வரலாற்றில் முதல் முறையாக, சட்டவிரோத வெளிநாட்டினரைக் கண்டுபிடித்து, இராணுவ விமானங்களில் ஏற்றி, அவர்களின் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்புகிறோம்," என்று ட்ரம்ப் கடந்த மாதம் செய்தியாளர்களிடம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |