வெளிநாடு சென்றுள்ள சாணக்கியன்: விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவு
வெளிநாடு சென்றுள்ள மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு (Shanakiyan Rasamanickam) தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
துருக்கியில் செயற்கை நுண்ணறிவு (AI) சம்பந்தமான செயலமர்வில் கலந்து கொள்வதற்காக அவர் சென்றுள்ள நிலையில் இலங்கை குற்றவியல் நடபடிமுறைக் கோவைச் சட்டத்தின் பிரிவு 106(1)(2)(3) இன் கீழாக இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக குறித்த தரப்பின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தடை உத்தரவானது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தடையுத்தரவு
மேற்படி விடயம் சம்பந்தமாக மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் நீதிமன்றுக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையை ஆராய்ந்த போது இந்த தடையுத்தரவை பிறப்பிப்பதற்கு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை குடியரசின் தேசிய தினம் 04-02-2025 அன்று கொண்டாடப்பட வேண்டியது என இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பில் 08ஆவது சரத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இன்று (4) மட்டக்களப்பு காந்தி பூங்கா பிரதேசத்தில் நடைபெற இருந்த சுதந்திரதின நிகழ்வுகளை பாதிக்கும் வகையிலான எந்தவொரு ஆர்பாட்டத்தையோ சட்டவிரோத செயற்பாடுகளையோ மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட எந்தவொரு பகுதியிலும் மேற்கொள்ளக்கூடாதென தடையுத்தரவு எனக்கும் இன்னும் பலருக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |