இந்திய துணை ஜனாதிபதி நாட்டை வந்தடைந்தார்
இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று காலை இலங்கையை வந்தடைந்தார்.
உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகைத் தந்துள்ள அவர் நாளையதினம்(20.04.2026) வரை நாட்டில் தங்கியிருப்பார்.
இந்திய துணை ஜனாதிபதியுடன் இணைத்து 49 பேர் கொண்ட குழுவொன்றும் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளது.
இரு தரப்பு கலந்துரையாடல்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவருக்கு, விளையாட்டுத் துறை அமைச்சர் குமார கமகே உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகளால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக அவர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்டவர்களை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

அத்துடன், அரசியல் பிரதிநிதிகளோடு அவர் கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு, பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




மயிலுக்கு ஆதரவாக நிற்கும் குடும்பம், ஆனால் சரவணன் செய்த ஷாக்கிங் விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
புடினுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு அச்சம் தீவிரம்: ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர் சதித்திட்டம் News Lankasri