மீண்டும் முல்லைத்தீவு கடலை ஆக்கிரமிக்கும் இந்திய இழுவைப்படகுகள் (VIDEO)

Mullaitivu Sri Lanka Economic Crisis Sri Lanka
By Varunan Jun 29, 2022 06:55 PM GMT
Report

இந்திய இழுவை படகுகள் மீண்டும் முல்லைத்தீவு கடற்பரப்பில் வருகை தந்து மீன்பிடியில் ஈடுபட்டு உள்ளமை தமக்கு இன்னும் பாரிய துன்பத்தை தந்துள்ளதாக முல்லைத்தீவு மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட காலமாக இந்தியா இழுவை படகுகளின் ஆக்கிரமிப்பு குறைவாக இருந்த நிலையில்,சட்டவிரோத தொழில்களினால் பாரிய துன்பப்பட்டு கொண்டிருந்த நிலைமையில் முல்லைதீவு மீனவர்கள் எரிபொருள் இன்மை காரணமாகவும்,தங்களுடைய வாழ்வாதாரங்களை இழந்து தொழிலுக்கு செல்ல முடியாத இக்கட்டான நிலைமையை எதிர்கொண்டிருந்தனர்.

இவ்வாறான பின்னணியில் இன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்கரையிலிருந்து பார்க்கின்றபோது தெரியக்கூடிய அளவில் சுமார் 20 க்கும் மேற்பட்ட இந்திய இழுவை மடி படகுகள் வருகை தந்து கடல் தொழிலில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

மீண்டும் முல்லைத்தீவு கடலை ஆக்கிரமிக்கும் இந்திய இழுவைப்படகுகள் (VIDEO) | Indian Tugboats Occupying The Mullaitivu Coast

கடலில் இழுவை மடிகளை பயன்படுத்தி மீன்பிடி

இந்த நிலைமையை அவதானித்த கடற்தொழில் அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் ஊடகவியலாளர்களை அழைத்துச் சென்று நிலைமைகளை நேரில் காண்பித்தனர்.


இதன்போது முல்லைதீவு கடலில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் பகுதியிலே 20 க்கும் மேற்பட்ட இழுவை மடி படகுகள் வருகை தந்து கடலில் இழுவை மடிகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் நெருக்கடிகளுக்கு மத்தியில் 30 வருட யுத்தத்தில் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்த மக்கள் தற்போது மீண்டும் தொடர்ச்சியாக நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

மீண்டும் முல்லைத்தீவு கடலை ஆக்கிரமிக்கும் இந்திய இழுவைப்படகுகள் (VIDEO) | Indian Tugboats Occupying The Mullaitivu Coast

இவ்வாறான பின்னணியில் ஊடகவியலாளர்களை அழைத்து சென்ற படகில் வந்த மீனவர்கள் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் குறித்த இந்திய இழுவைப் படகுகளில் வந்தவர்களை எங்களுக்கு உதவி செய்வதாக கூறிக்கொண்டு நீங்கள் இவ்வாறான நிலைமையில் தொழிலை செய்து எங்களுடைய வாழ்வாதாரத்தையும் அழித்தால் நாங்கள் எப்படி வாழ்வது என்பதையும்,எனவே எங்களுடைய கடற் பகுதிக்கு வந்து தொழில் செய்ய வேண்டாம் என்பதையும் குறித்த இந்திய மீனவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இந்திய மீனவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.

சட்டவிரோத தொழில்கள்

சட்டவிரோத தொழில்கள் மற்றும் இவ்வாறான இந்திய இழுவைப்படகுகள் அச்சுறுத்தல்கள் காரணமாக தங்களுடைய வாழ்வாதாரம் முற்றுமுழுதாக பாதிப்படைந்து இருப்பதாகவும்,இன்னும் ஒரு தடவை இந்த இந்திய இழுவைப்படகுகள் முல்லைத்தீவு கடற்கரை நோக்கி வருமாக இருந்தால் அந்த படகை கரைக்கு தாங்களாகவே கொண்டு வருவோம் எனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மீண்டும் முல்லைத்தீவு கடலை ஆக்கிரமிக்கும் இந்திய இழுவைப்படகுகள் (VIDEO) | Indian Tugboats Occupying The Mullaitivu Coast

குறித்த படகுகள் வருகை தந்த விடயம் தொடர்பில் கடற்தொழில் நீரியல் வள திணைக்களம் ,கடற்படை ,அரசாங்க அதிபர் ஆகியோருக்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் .  

5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US