இந்திய உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இந்திய இழுவை படகு விவகாரம்
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்குறித்து இந்திய உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்துக் கலந்துரையாடியபோது, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் பேசப்பட்டது.
உயர்ஸ்தானிகர் முல்லைத்தீவு வருகை
அத்தோடு இந்தச் சந்திப்பில் இந்திய இழுவைப்படகுகள் எமது கடல் பகுதிகளுக்குள் அத்துமீறி வருகைதந்து, எமது கடற்றொழில் மக்களின் வாழ்வாதாரங்களை சூறையாடிச் செல்கின்ற விடயத்தினையும் முன்வைத்திருந்தேன்.

நாம் கரையில் இருந்து பார்க்கும்போது தெரியக்கூடிய அளவில் வெளிச்சமிட்டவாறு இந்திய இழுவைப் படகுகள் செய்கின்ற அட்டகாசமான செயற்பாடுகளைப் பற்றி அவரிடம் மிக அழுத்தமாகச் சுட்டிக்காட்டியிருந்தேன்.
அந்தவகையில், இந்திய கடற்றொழிலாளர்களால் எமது கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படும் இழப்புக்கள் தொடர்பில் அவரிடம் மிக விரிவாக எடுத்துக்கூறியிருந்தேன். இவ்வாறு அவரிடம் இந்த விடயத்தை முன்வைத்து நான் பேசும்போது ஏனைய தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாகப் பேசியிருந்தனர்.

இதன்போது, இந்த இழுவைப் படகுகள் அத்துமீறி நுழையும் விடயத்தில் கவனம் செலுத்துவதாகவும், எதிர்வரும் ஜனவரியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் தாம் வருகைதரவுள்ளதாகவும் உயர்ஸ்தானிகரால் தெரிவிக்கப்பட்டது” என்றுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 20 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன் விசாரிக்கப்பட்ட விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri