சிங்கப்பூரில் தமிழரொருவருக்கு சிறை தண்டனை விதிப்பு
சிங்கப்பூரில் இந்தியரின் காதை கடித்து காயம் ஏற்படுத்திய மற்றொரு இந்தியருக்கு ஐந்து மாத சிறைத்தண்டனை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பணி நிமித்தம் சிங்கப்பூர் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 37, 47 வயதுடைய இருவரில் ஒருவர் மற்றொரு இந்தியரின் வீட்டில் வாடகை அடிப்படையில் தங்கியுள்ளார்.
இதன்போது தங்கியிருந்த வீட்டின் மாடியில் அமர்ந்து மது அருந்தியமையினால் வீட்டு உரிமையாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த நபர் வீட்டு உரிமையாளரை திட்டியுள்ளதுடன், அவரின் காதை கடித்து காயப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து, வீட்டு உரிமையாளரான இந்தியர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய, சந்தேகநபரை கைது செய்த அந்நாட்டு பொலிஸார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து சந்தேகநபர் குற்றத்தினை ஒப்புக்கொண்டதையடுத்து, ஐந்து மாத சிறை தண்டனையும், 60,780 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
