இந்திய முன்னணி பாடகி லதா மங்கேஷ்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
இந்தியாவின் முன்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் ‘இசைக்குயில்’ என வர்ணிக்கப்படும் லதா மங்கேஷ்கர், தமிழ், இந்தி, மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார்.
92 வயதான லதா மங்கேஷ்கர் பாரத ரத்னா, பத்ம பூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
மராட்டிய மாநிலம் மும்பையில் குடும்பத்தினருடன் வசித்து வரும் லதா மங்கேஷகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.