இலங்கையில் இந்தியர்களின் நுட்பமான மோசடி - கமராவில் சிக்கிய காட்சிகள்
ஹட்டன் நகருக்கு செல்லும் இந்திய நாட்டவர்கள் சிலர், அங்குள்ள கடைகளுக்கு சென்று காசாளர்களை ஏமாற்றி பணம் மோசடி செய்யும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடைகளுக்கு வரும் குறித்த வெளிநாட்டவர், கடையிலிருந்து பொருட்களை பெற்றுக்கொண்டு அதற்காக 5000 ரூபாய் நாணயத்தாள் ஒன்றை வழங்கியுள்ளனர்.
அதற்கான மீதிப் பணத்தைக் காசாளர் வழங்கும் சந்தர்ப்பத்தில், தான் கொடுத்த 5000 ரூபாய் நாணயத்தாளை மீண்டும் பெற்றுக்கொண்டு காசாளரின் கவனத்தை வேறு திசைக்குத் திருப்புகிறார்.
கமராவில் சிக்கிய காட்சிகள்
பின்னர் அந்த 5000 ரூபாயையும் அதற்கான மீதிப் பணத்தையும் எடுத்துச் செல்லும் காட்சிகள் அக்கடைகளில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளன.

காசாளர் பணத்தை உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்காக பணத்தை எண்ணும்போது 5000 பணம் குறைவாக இருந்ததையடுத்து, அக்கடையின் பாதுகாப்பு கமரா பதிவுகளை பரிசோதித்த போதே இந்த மோசடி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ஹட்டன் நகரில் இவ்வாறு மோசடியான முறையில் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நபர் குறித்து அவதானமாக இருக்குமாறு நகர வர்த்தக சங்கம் வியாபார சமூகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 6 நிமிடங்கள் முன்
பிரான்சில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு: பாரிஸின் முக்கிய வீதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை News Lankasri
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரணமடைந்ததாக வெளியான தகவல்: அரசு வெளியிட்ட புகைப்படங்கள் News Lankasri
450-க்கும் மேற்பட்ட பிரித்தானியர்கள் திரும்பவே இல்லை: அமெரிக்க செயலருக்கு பிரித்தானியா கண்டனம் News Lankasri