ரணிலின் புதிய நகர்வால் அதிர்ச்சியில் இந்திய RAW
மைத்திரி மூலம் அடிக்கப்பட்ட சுனாமியானது இந்திய ரோ அமைப்பு எதிர்பார்க்காத நேரத்தில் கொடுக்கப்பட்ட அதிர்ச்சி என அரசியல் ஆய்வாளர் எம்.எம். நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தான் தோல்வியடையும் ஒரு தேர்தலுக்கு ரணில் செல்ல மாட்டார். ஏதோவொரு துரும்பை வைத்துக் கொண்டு அவர் தேர்தலுக்கு தயாராகிறார்.
சாகல ரட்நாயக்க சீனா போகின்றார் வரும் வழியில் இந்திய உயர்மட்டங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போகிறார்.
பொதுவாக சொல்லப்போனால் 9.0 ஐ தாண்டி மிகப்பெரிய சுனாமி அலையொன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூலம் அடிக்கப்பட்டிருக்கிறது.
இந்தநிலையில் மொட்டுக்கட்சி பலத்த பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. அப்படியே மொட்டுக்கட்சி இம்முறை வெற்றி பெறுமாக இருந்தால் ரணிலால் இனி எப்போதுமே ஜனாதிபதியாக முடியாது. இந்திய ரோவிற்கும் ஒரு பின்னடைவு, மொட்டுக்கட்சிக்கும் ஒரு பின்னடைவு என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |