யாழ். பலாலியில் தரையிறங்க தயாராகும் நரேந்திர மோடி?
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கையில் இடம்பெறும் ‘பீம்ஸ்ரெக்’ BIMSTEC உச்சி மாநாட்டில் பங்கேற்க இலங்கைக்கு பயணம் செய்யக்கூடும் என்ற ஊகங்கள் பரவிவவருகின்றன.
இந்த நிலையில் இந்தியாவில் இருந்து நேரடியாகவே விமானம் மூலம் பலாலிக்கு அவர் செல்ல திட்டமிடுவதான செய்திகளும் வெளிவந்துள்ளன.
முதலில் யாழ்ப்பாணத்துக்கு சென்று அங்கு இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட தமிழ் கலாசார நிலையத்தை திறந்து வைத்த பின்னர் அங்கிருந்து கொழும்புக்கு செல்வதற்கு இந்திய அதிகாரிகள் திட்டமிடுவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீம்ஸ்ரெக் BIMSTEC உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தாலும் பிரதமர் மோடியின் இந்தப்பயணம் குறித்த இந்தியத்தரப்பு இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்புக்களை வெளியிடவில்லை.
இதற்கிடையே மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமக்கு நேரத்தை ஒதுக்கித்தருமாறு இந்தியத்தரப்பிடம் கோரியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்குரிய தீர்வு குறித்து தமிழ் கட்சிகள் இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியிருந்த நிலையில் சம்பந்தன் பேச்சுக்களுக்கான நேரத்தை கோரியுள்ளமை குறிப்படத்தக்கது.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam