இலங்கை நபருக்கு இந்திய கடவுச் சீட்டு! விசாரணைகள் தீவிரம்
இலங்கையைச் சேர்ந்தவருக்கு இந்திய கடவுச் சீட்டு வழங்கப்பட்டது தொடர்பாக, கடவுச்சீட்டு அதிகாரி உள்பட மூவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்தவருக்கு சட்டவிரோதமாக இந்திய கடவுச் சீட்டு வழங்கியதாக கடவுச் சீட்டு அலுவலக கண்காணிப்பாளர் உள்பட மூவர் மீது மத்திய புலனாய்வுத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது .
மதுரை மண்டல கடவுச் சீட்டு அலுவலகத்தில் முதுநிலை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வரும் வீரபுத்திரன் என்பவர் பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக கடவுச் சீட்டு வழங்கியதாக புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக இரகசிய விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் வீரபுத்திரன், இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு இந்தியர் எனக் கூறி, சட்டவிரோதமாக கடவுச் சீட்டு வழங்கியதும், அதற்காக 45 ஆயிரம் பெற்றுக் கொண்டதும் தெரியவந்தது.
இதையடுத்து கண்காணிப்பாளர் வீரபுத்திரன், கடவுச் சீட்டு வாங்கியவர் உள்ளிட்ட மூவர் மீதும் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri