அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவன் கொடூரமாக கொலை
அமெரிக்காவில் உள்ள பர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த இந்திய வம்சாவளி மாணவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளி மாணவரான வருண் மணிஷ் ஷேடா (வயது 20) அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள பர்டு பல்கலைக்கழகத்தில் ( Purdue University ) அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கி படித்து வந்துள்ளார்.
இவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை(5.10.2022) உயிரிழந்துள்ளார்.
கொரிய நாட்டை சேர்ந்த சக மாணவர் கைது
மணிஷ் ஷேடா இறந்து கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் குறித்து அவரது விடுதி அறையில் தங்கியிருந்த கொரிய நாட்டை சேர்ந்த ஜி மின் ஷா (வயது 22) என்ற மாணவரை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணைக்கு பிறகே மணிஷ் ஷேடா கொலை செய்யப்பட்டது எதனால்? யாரால் கொல்லப்பட்டார்? ஆகிய விவரங்கள் தெரியவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மணிஷ் ஷேடா உடல் பிரேத பரிசோதனை அறிக்கையின் படி, கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதில் காயங்கள் அடைந்து உயிரிழந்து இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam
