இங்கிலாந்தில் விபத்தில் உயிரிழந்த இந்திய வம்சாவளி சிறுவர்கள்! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 சிறுவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த வழக்கில் 2 பேர் குற்றவாளிகள் என இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இங்கிலாந்தின் வோல்வெர்காம்ப்டன் என்ற இடத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்னர் விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் இந்திய வம்சாவழியை சேர்ந்த 10 வயது சிறுவன் சஞ்சய் மற்றும் 2 வயது சிறுவன் பவான்வீர் சிங் ஆகியோர் உயிரிழந்தனர். அவர்களின் தாயார் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைப்பெற்று வந்தார்.
தண்டனை விபரம்
இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முகம்மது சுலைமான்கான் (வயது 27) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதற்கமைய, கடந்த நான்கு வருடங்களாக இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையில் கடந்த வாரம் சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கினை விசாரித்த வெஸ்ட் மிட்லாண்டு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் குற்றவாளிகள் என்று அறிவித்துள்ளதுடன், அவர்களுக்கான தண்டனை விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கிடையில் உச்சக்கட்ட முறுகல்! கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு உடன் வெளியேற இந்தியா உத்தரவு

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
