வடக்கில் மூன்று நாள் விஜயத்தை பூர்த்தி செய்த இந்திய வர்த்தக பிரதிநிதிகள் (Photos)
இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) மற்றும் விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளையின் (VIF) பிரதிநிதிகள் குழுவொன்று வட மாகாணத்திற்கான 3 நாள் பயணத்தின் போது (ஜூலை 30- ஆகஸ்ட் 01) வட மாகாணத்தில் பல துறைகளில் முதலீட்டு வழிகளை ஆராய்ந்தது.
வட மாகாண ஆளுநருடன் வழக்கமான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தளவாடங்கள், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் விவசாயம் போன்ற துறைகளை மையமாக வைத்து விவாதங்கள் நடைபெற்றன.

3 நாள் விஜயத்தின் போது, வடமாகாணத்தில் கூட்டு முயற்சிகள், முதலீடுகள் மற்றும் வர்த்தக இணைப்புகளை ஆராய்வதற்காக உள்ளூர் வர்த்தக சபைகள், வர்த்தகர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோருடன் பிரதிநிதிகள் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.
வடமாகாணத்திற்கான அவர்களின் விஜயத்தைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடுகள் மற்றும் வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவதற்காக நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் தூதுக்குழுவினர் விஜயம் செய்யவுள்ளனர்.

தற்போதைய விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்து வடிவங்களிலும் தொடர்பை மேம்படுத்துவதற்கும், பகிரப்பட்ட பொருளாதார வளர்ச்சி மற்றும் செழுமைக்காக இந்த இணைப்புகளைப் பயன்படுத்துவதற்கும் இந்தியா மற்றும் இலங்கைத் தலைவர்களின் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் சென்றதாக கன்சல் ஜெனரல் ராகேஷ் நட்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam