இந்திய கடற்படைக் கப்பல் இலங்கைத் துறைமுகத்தை வந்தடைந்தது: இலங்கை கடற்படை
இந்திய கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் டெல்லி, திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இன்று (16.01.2023) காலை வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர் என கடற்படை தெரிவித்துள்ளது.
நாசகாரி கப்பல்
ஐஎன்எஸ் டெல்லி என்ற கப்பல், 163.2 மீ நீளமுள்ள நாசகாரி கப்பலாகும். 390 பேர் கொண்ட பணியாளர்களை கொண்ட இந்த கப்பலுக்கு கெப்டன் ஷிராஸ் ஹசைன் ஆசாத் தலைமை தாங்குகிறார்.
அவர் நாளையதினம் கிழக்கு கடற்படை தலைமையகத்தில், கிழக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க குமாரவை சந்திக்க உள்ளார்.
கப்பல் தங்கியிருக்கும் காலத்தில், இரு கடற்படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்தும் நோக்கில், இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளில் பணியாளர்கள் பங்கேற்பார்கள்.
இந்திய கப்பலில் பயிற்சி
மேலும், இலங்கை கடற்படை வீரர்களும் இந்திய கப்பலில் பயிற்சிகளில் ஈடுபடுவார்கள்.
பயணத்தை முடித்துக் கொண்டு ஐஎன்எஸ் டெல்லி கப்பல் எதிர்வரும் 17ஆம் திகதி
இலங்கையில் இருந்து புறப்படும் என்று கடற்படை தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
