இலங்கைக்கு உணவு அனுப்புவது தொடர்பில் தமிழக அமைச்சரின் எச்சரிக்கை
அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பும் முயற்சிகள் குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி எச்சரித்துள்ளார்.
தமிழக அரசாங்கம் 40,000 தொன் அரிசி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 10 கிலோ பைகளில் அரிசியை பொதி வழங்குவதற்காக ஐம்பத்தொரு அரிசி ஆலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள நல்ல தரமான அரிசி வகைகள், தூத்துக்குடி மற்றும் சென்னை போன்ற துறைமுகங்களுக்கு போக்குவரத்து செலவு உட்பட ஒரு கிலோ 33.50 ரூபாவுக்கு மாநில அரசாங்கத்தினால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், ஒரு சிலர், இந்திய உணவுக் கழகத்திடம் இருந்து 20 ரூபாய்க்கு அரிசி கொள்முதல் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கூறி, சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.
இந்தநிலையில் பொது விநியோகத் திட்டத்துக்கான அரிசியை அனுப்புவதில் உள்ள சவால்களைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் சக்கரபாணி, தவறாக வழிநடத்தும் சமூக ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும என்று எச்சரித்துள்ளார்.
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam