இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட சந்திப்பு!
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் கொழும்பு விஜயம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட நேற்று (16.01.2023) சந்தித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கொழும்புக்கு விஜயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்புக்கான முன்னுரிமைப் பகுதிகள் குறித்து விவாதிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மிலிந்த மொரகொட சந்தித்துள்ளார்.

உயர்ஸ்தானிகரகம் அறிக்கை
மொரகொட மற்றும் டோவல் இருதரப்பு உறவுகள் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.
இந்த கலந்துரையாடலின் போது இரண்டு நாடுகளின் பரஸ்பர மூலோபாய நலன்கள் மற்றும் ஒத்துழைப்பிற்கான முன்னுரிமைப் பகுதிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது என்று இலங்கை உயர்ஸ்தானிகரகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பு இலங்கை தூதுவருக்கும் டோவாலுக்கும் இடையிலான வழக்கமான மற்றும் தொடர்ச்சியான உரையாடலின் ஒரு பகுதியாகும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீனக் கண்காணிப்புக் கப்பலான யுவான் வாங் வந்து சென்றதன் பின்னர் பாதிக்கப்பட்ட இருதரப்பு உறவுகளை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பாக இந்த சந்திப்பு பார்க்கப்படுகிறது
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam
பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam