இலங்கையர்களுக்கு போலி கடவுச்சீட்டு வழங்கும் இந்திய முகவர்கள்
இலங்கையர்களுக்கு மோசடியான முறையில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொடுத்த இந்திய தரகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் போலி ஆவணங்கள் மூலம் 28 பேருக்கு கடவுச்சீட்டு பெற்றுக்கொடுத்த தபால் ஊழியர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடவுச்சீட்டுகள்
கடந்த 12 ஆம் திகதி இரவு பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில், கடவுச்சீட்டுகள் கைமாற்றப்பட்டபோது, சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை பொலிஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வசிக்கும் 28 இலங்கையர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam