இந்திய பிரதமரின் திருமலை முதலீடு: நாடாளுமன்றில் விளக்கமளித்த ரணில்(Video)
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, "தனக்கு நாடாளுமன்ற ஆதரவிருந்தால் 13ஆம் திருத்தச்சட்டம் உள்ளிட்ட விடயங்களை நகர்த்தி அணைத்து அரசியல் செயற்பாடுகளையும் சிறப்புற செய்யலாம் என்ற விடயத்தை பகிரங்கபடுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(09.08.2023) இடம்பெற்ற விசேட உரையிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த உரையில் இந்திய விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் விளக்கமளித்த அவர், இந்திய பிரதமரின் திருமலை உள்ளிட்ட வடக்கு கிழக்கு முதலீட்டு திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.
மேலும் தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் இருந்தாலும், நாடாளுமன்றத்திற்கு அணைத்து விடயங்களையும் வெளியிட்டே செயற்படுகின்றேன் என சுட்டிக்காட்டியிருந்தார்.
13ஆம் திருத்தச்சட்டம் தொடர்பில் தமிழர் தரப்பும், சிங்கள தரப்பும் பல்வேறு முரணான கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் வேளையில், 13 ஆம் திருத்தச்சட்டத்திற்கு நாடாளுமன்றின் முழு ஆதாரம் தேவை என ஒரு விடயத்தை ரணில் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இவை உள்ளிட்ட இலங்கை மற்றும் உலக அரசியல் விடயங்களை சுமந்து வருகிறது இன்றைய செய்திவீச்சு..




